Loading...
நைஜீரியாவின் Kaduna மாநிலத்திலுள்ள பள்ளிவாசலொன்றின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 30 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்தில் சிக்குண்டு உயிரிழந்தவர்களில் நால்வரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Loading...
அத்துடன் எஞ்சிய சடலங்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1980 ஆண்டு காலப்பகுதியில் கட்டப்பட்ட பள்ளிவாசலின் ஒரு பகுதியே இவ்வாறு இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...