மத்திய வங்கியினால் ஏற்கனவே தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களுக்கு மேலதிகமாக வேறு பிரமிட் மோசடி செய்பவர்கள் இருக்கலாம் எனவும், அவர்களை கண்டுப்பிடிக்க விசாரணை செய்து வருவதாகவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
பிரபலமான விளையாட்டு, மதம் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகளுக்கு நிதியுதவி செய்வதன் மூலம் இந்த மோசடி வணிகங்கள் சமூகத்தில் நல்ல நிறுவனங்களாக அல்லது தனிநபர்களாக காட்ட முயற்சிப்பதாகவும் மத்திய வங்கி கூறுகிறது.
எனினும் மத்திய வங்கி பொதுமக்களை ஏமாற வேண்டாம் என்றும் மக்களின் பணத்தை பாதுகாக்குமாறும் மத்திய வங்கி எச்சரித்துள்ளது.
கடும் நடவடிக்கை
மேலும், மத்திய வங்கி இதற்கு முன்னர் 8 பிரமிட் திட்டங்கள் குறித்து ஊடகங்கள் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளது.
எனினும், தற்போது நடைமுறையில் உள்ள அனைத்து பிரமிட் திட்டங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.