நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக குழாய் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
வரட்சியான காலநிலையால் மக்களின் சராசரி நீர் நுகர்வு வெகுவாக அதிகரித்துள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மக்களைக் கொண்டுள்ளது.
விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு
கார்களை கழுவுதல், தோட்டம் அமைத்தல், நீச்சல் குளம் பராமரிப்பு போன்ற பணிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குழாய் நீரை பயன்படுத்துவதை மட்டுப்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றது.
குறைந்த அழுத்தம் காரணமாக உயரமான பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைபடலாம். எனவே பொதுமக்கள் நீரை சேகரித்து சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
எனவே சில பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் தண்ணீர் வரக்கூடும் என்றும்,நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தால் நிலைமை மேம்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.