இந்தியாவில் இருந்து பஞ்சாப் மாநிலத்தை பிரித்து தனி நாடாக அறிவிக்க வேண்டும் என காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தெரிவித்து வருகின்றனர்.
காலிஸ்தான் ஆதரவாளர்கள் உலகின் பல இடங்களில் உள்ளனர். குறிப்பாக கனடாவில் அதிக அளவில் உள்ளனர்.
அவர்கள் இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
காலிஸ்தான் செயற்பாடுகள்
இந்நிலையில், நேற்றிரவு(12) கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள லட்சுமி நாராயணன் கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அத்தோடு கோவில் கதவில் ஜூன் 18 ஆம் திகதி நடைபெற்ற கொலையில் இந்தியாவின் பங்கு குறித்து கனடா விசாரணை செய்கிறது என போஸ்டரை ஓட்டிவைத்து சென்றுள்ளனர்.
காலிஸ்தான் செயற்பாடுகள் அதிகரித்து வருவதற்கு எதிராக இந்தியா தனது கவலையை கனடாவிடம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே இந்து கோவில்கள் கனடாவில் தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
கடந்த ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.