தமிழகத்தின் அடுத்த முதல்வராக அன்புமணி ராமதாஸ் தான் வரவேண்டும் என ஜெயலலிதாவின் ஆன்மா விரும்புவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சேலத்தில் நடைபெற்ற சுதந்திரப் போராட்ட வீரர் கவிச்சிங்கம் சேலம் அர்த்தநாரீச வர்மா நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், அன்புமணி சொன்ன மாற்றம், முன்னேற்றம் ஆகியவை தமிழகத்தில் நடக்கத்தான் போகிறது.
ஜெயலலிதா ஆவி என்ன சொல்கிறது என்றால், நான் ஊழல் செய்து வந்துவிட்டேன். என் தோழியும் சரியில்லை. அன்புமணி தான் அடுத்து முதல்வராக வர வேண்டும் என்றுதான் சொல்கிறது. அன்புமணி முதல்வராவதைத்தான் ஜெயலலிதாவின் ஆன்மா விரும்புகிறது.
எனவே, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர் செல்வத்தின் ஆட்சியெல்லாம் அழிந்து போய், பாமக கட்சியின் ஆட்சி தமிழகத்தில் நடக்கவிருக்கிறது என கூறியுள்ளார்.