Loading...
மிஹிந்தலை நகரை மையமாகக் கொண்டு பொருள் ஏற்றுமதி வலயத்தை அமைப்பதற்குத் திட்டமிட்டிருப்பதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் உற்பத்தி செய்யப்படும் மரக்கறி, பழவகை உட்பட ஏனைய பொருட்களை சேகரித்து ரயில் மார்க்கமாக கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவருவதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
Loading...
இதேபோல் இறக்குமதி செய்யப்படும் பொருட்களை ரயில் மார்க்கமாக மிஹிந்தலைக்கு கொண்டு சென்று குறித்த மாகாணங்களுக்குப் பகிர்ந்தளிப்பதற்கும் திட்டமிடப்பட்டிருக்கின்றது.
ரயில் மார்க்கம்
அனுராதபுரம், மிஹிந்தலை ரயில் மார்க்கத்தை நிர்மாணிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பங்கேற்றபோதே அமைச்சர் இந்த விடயத்தைத் தெரிவித்தார்.
Loading...