Loading...
மாத்தறை – தொடங்கொட பகுதியில் கூரிய ஆயுதங்களால் வெட்டி ஒரு பிள்ளையின் தந்தை கொலை செய்யப்பட்டுள்ளதாக தொடங்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த கொலைச்சம்பவம் இன்று காலை(14.08.2023) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Loading...
பொலிஸார் விசாரணை
மாத்தறை – தொடங்கொட, டொலேலண்ட் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய திமுத் சாமிக்க என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கொலைச்சம்பவம் தொடர்பிலான சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், சந்தேக நபரை கண்டுபிடிக்கும் நோக்கில் தொடங்கொட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
Loading...