கடும் வறட்சி காரணமாக சப்ரகமுவ, கிழக்கு, வடமேற்கு, வடக்கு, ஊவா மற்றும் தெற்கு ஆகிய ஆறு மாகாணங்களில் 51641 குடும்பங்களைச் சேர்ந்த 171781 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வடமாகாணத்தில் 23,568 குடும்பங்களைச் சேர்ந்த 75,165 பேரும், கிழக்கு மாகாணத்தில் 18,951 குடும்பங்களைச் சேர்ந்த 63,136 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மையம் தெரிவித்துள்ளது.
யாழ்.மாவட்டமே அதிகளவில் பாதிப்பு
குடிநீர் பற்றாக்குறை, வறண்ட வானிலை போன்ற பிரச்சனைகளால் இம்மக்கள் அவதிப்படுகின்றனர். கடும் வறட்சி காரணமாக 13 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாண மாவட்டமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்டத்தின் நெடுந்தீவு, ஊர்காவற்றுறை, சாவகச்சேரி, மருதன்கேணி, சங்கானை ஆகிய பிரதேச செயலகப் பகுதிகளில் 21999 குடும்பங்களைச் சேர்ந்த 70238 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர மன்னார் மாவட்டத்தில் 952 குடும்பங்களைச் சேர்ந்த 3244 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 167 குடும்பங்களைச் சேர்ந்த 563 பேரும், வவுனியா மாவட்டத்தில் 450 குடும்பங்களைச் சேர்ந்த 1120 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 4039 குடும்பங்களைச் சேர்ந்த 14116 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 2320 குடும்பங்களும். மட்டக்களப்பு மாவட்டத்தில் 7737 குடும்பங்கள். 29508 அம்பாறை மாவட்டத்தில் 7739 குடும்பங்களைச் சேர்ந்த 25891 பேர், புத்தளம் மாவட்டத்தில் 60 குடும்பங்களைச் சேர்ந்த 215 பேர், குருநாகல் மாவட்டத்தில் 3041 குடும்பங்களைச் சேர்ந்த 9828 பேர், பதுளை மாவட்டத்தில் 1324 பேர், பதுளை மாவட்டத்தில் 329 குடும்பங்களைச் சேர்ந்த 1324 பேர்,மொனராகலை மாவட்டத்தில் 140 குடும்பங்களைச் சேர்ந்த 485 பேர், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 1513 குடும்பங்களைச் சேர்ந்த 7512 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.