Loading...
தனது குரலில் சொந்த பாடல்களை பாடிய தருணங்களே தனக்கு நெகிழ்ச்சி தரும் தருணமாக இருந்ததாக ஈழத்தின் புரட்சிப் பாடகர் மாமனிதர் எஸ்.ஜீ.சாந்தன் தெரிவித்திருந்தார்.
ஒருமுறை இலங்கையின் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த போதே அவர் இதனை கூறியிருந்தார்.
சாந்தன் தனது பாடல்களினால் ஈழப் போராட்டத்திற்கு வலுசேர்த்தவர். அது மாத்திரமல்லது இலங்கை ஆலயங்களை வைத்து பக்தி பாடல்களையும் பாடியுள்ளார்.
பாடல்களை அவரே இயற்றி பாடியமை குறிப்பிட்டு கூறவேண்டிய சிறப்பம்சம்.
Loading...
இவர் பாடிய பாடல்களில் பக்தி பாடல்களில் புட்டு மண் சுமந்த பெருமானார். இந்த கொக்கட்டிச் சேலையிலே உருவானார் என்ற பாடல் மிக பிரபலமானது.
இந்த உன்னத கலைஞன் ஈழ மண்ணை விட்டு போனாலும் அவரது புகழும் பாடல்களும் என்றும் மங்கா புகழுடன் வீரநடை போடும்.
Loading...