Loading...
தனமல்வில ஹம்பேகமுவ பகுதியில் சட்ட விரோதமான முறையில் தனியாருக்குச் சொந்தமான 4 காணிகளில் கஞ்சா பயிர்செய்கையில் ஈடுபட்டிருந்த மூவரை விசேட அதிரடிப் படையினர் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர்.
அத்துடன் குறித்த காணிகளில் காணப்பட்ட அனைத்து கஞ்சா செடிகளையும் பொலிஸார் அழித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
இதில் கைது செய்யப்பட்டவர்களையும் சான்று பொருளாக கஞ்சா செடிகளையும் தம்மிடம் விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளதாகவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஹம்பேகமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Loading...