கிளிநொச்சி கண்டவாளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கண்ணகிநகர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் 35 வருடங்களாக அவர்கள் சுத்தமான குடிநீரை பெற முடியாமல் தவித்து வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பலர் நீண்டநாட்களாக நோய்த்தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுவருவதாகவும், எனினும் இதற்கான தீர்வு இதுவரை எட்டப்படவில்லை எனவும் மக்கள் அங்கலாய்க்கின்றனர்.
அத்துடன்தமக்கு தேவையான சுத்தமான குடிநீரை பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் இருப்பதாகவும் ஒவ்வொரு தேர்தல் காலங்களிலும் வரும் அரசியல்வாதிகள் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க உடன் நடவடிக்கை எடுப்பதாகவும் வாக்குறுதி அளித்துவிட்டு போய் மறு தேர்தல் வரும்போதுதான் அவர்களை காணக் கூடியதாக உள்ளதாகவும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஒரு தீர்வினைப் பெற்றுத்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.