மதவாச்சி பகுதியில் சட்டவிரோத மருந்து விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நேற்றையதினம் (14) ஆம் திகதி அனுராதபுரத்தில் கடற்படை மற்றும் உணவு மற்றும் மருந்துப் பரிசோதகர் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே மதவாச்சி பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மருந்தகத்தில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
பிரகபிலின் (Pregabalin)150mg வகை மாத்திரைகளை சட்டவிரோதமாக விற்பனைக்கு வைத்திருந்தமை சோதனைகளின் போது கண்டுபிடிக்கப்பட்டது.
11,377 மாத்திரைகள்
இந்த சோதனை நடவடிக்கைகளின் போது 11,377 Pregabalin 150mg மாத்திரைகள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 40 வயதுடைய மதவாச்சி பிரதேசத்தை சேர்ந்தவரென காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர், கைப்பற்றப்பட்ட மாத்திரைகள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அநுராதபுரத்தில் உள்ள உணவு மற்றும் மருந்துப் பரிசோதகர் பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.