உடல்நலனில் வயிறு பராமரிப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. பலருக்கு செரிமான பிரச்சினை, மலச்சிக்கல் போன்றவற்றால் வயிற்றில் பிரச்சினைகள் எழுகிறது.
சில பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் வயிற்றை சுத்தமாக வைத்துக் கொள்ள முடியும்.
அப்பிளில் உள்ள நார்ச்சத்து
கோடை காலங்களில் பொதுவாகவே பலருக்கும் செரிமான பிரச்சினை, மலச்சிக்கல் மற்றும் வாயு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. உடலில் நீர்ச்சத்து குறைதல், குடலில் ஆரோக்கிய அமிலங்களின் குறைபாடு பாக்டீரியாக்களை உருவாக்குகிறது. அப்பிளில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்துவதுடன் குடல் பற்றீரியாக்கள் உருவாவதை தடுக்கிறது.
பப்பாளி பழத்தில் உள்ள பாப்பைன் என்சைம் செரிமான சக்தியை அதிகரிக்கிறது. மலச்சிக்கலை தீர்க்க உதவுகிறது.
ஒரேஞ் பழத்தில் உள்ள சிட்ரஸ் அமிலம் வயிறு மற்றும் குடல் சார்ந்த பிரச்சினைகளை தீர்க்கிறது.
வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் கொய்யா
கொய்யா பழத்தில் உள்ள அண்டி மைக்ரோபியல் பண்புகள் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்துகிறது.
ஸ்ட்ராபெர்ரி பழத்தில் உள்ள விட்டமின் சி மற்றும் ஃபோலேட் ஆகியவை குடல் அசுத்தங்களை நீக்கி சுத்தப்படுத்துகிறது.