விரயங்கள் கூடும் நாள். வீடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். அண்டை, அயலாருடன் இருந்த சண்டை, சச்சரவுகள் அகலும். அரசியல் வாதிகளின் சந்திப்பால் அனுகூலம் கிட்டும். பணவரவு எதிர்பார்த்தபடி அமையும்.
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். பிரியமானவர்களுடன் பிரயாணங்களை மேற்கொள்வீர்கள். எடுத்த செயலை இனிதே செய்து முடிப்பீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன் யோசிப்பது நல்லது.
குடும்ப ஒற்றுமை கூடும் நாள். புதிய முயற்சியில் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அனுசரிப்பு கிடைக்கும். சேமிப்பு உயரும். கூடப்பிறந்தவர்களுடன் இருந்த பகை மாறும்.
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். விரோதங்கள் அகலும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கூட்டுத்தொழில் புரிவோர் ஏற்றம் பெறுவர். தீட்டும் திட்டங்களை ரகசியமாக வைத்துக் கொள்வது நல்லது.
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வீண்பழிகள் ஏற்படாமல் இருக்க விழிப்புணர்ச்சி தேவை. மறைமுகப் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்ப்பது நல்லது. குடும்பச்சுமை கூடும்.
விருப்பங்கள் நிறைவேறும் நாள். ஆசையாக வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். பணத்தேவைகளுக்காக எடுத்த முயற்சி கடைசி நேரத்தில் வெற்றி பெறும். சொத்துக்களால் லாபம் உண்டு.
சம்பள உயர்வு பற்றிய சந்தோஷத் தகவல் வந்து சேரும் நாள். எதிர்ப்புகளை முறியடிக்க இனிய திட்டம் தீட்டுவீர்கள். எந்தக் காரியத்தையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள்.
பிரபலமானவர்களின் சந்திப்பு நிகழும் நாள். மடல் மூலம் மகத்தான செய்தியொன்று வந்து சேரும். இல்லத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். செல்லும் இடமெல்லாம் சிறப்பான வரவேற்பு கிடைக்கும்.
மனச்சுமை குறையும் நாள். நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவர். வருமானம் உயரும். வாழ்க்கைத் தேவைகள் மாலை நேரத்தில் பூர்த்தியாகும். வீடு, இடம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாள். பணவசதி பெருகும். பதவி உங்களைத் தேடிவரும். இதுவரை இருந்த பிரச்சினைகள் இன்று நல்ல முடிவிற்கு வரும். பயணத்தால் பலன் உண்டு.
நினைத்த காரியத்தை நினைத்தவுடன் செய்து முடிக்கும் நாள். கொள்கைப் பிடிப்பை நண்பர்களுக்காகத் தளர்த்திக் கொள்வீர்கள். பணவரவு திருப்தியளிக்கும். வாரிசுகளால் பிரச்சினை ஏற்படலாம்.
வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும் நாள். புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதில் இருந்த இடையூறுகள் அகலும். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வேலைப்பளு கூடும்.