நிதிக் கடனின் சவால்களைத் திறம்பட எதிர்கொள்ள இலங்கைக்கு சீனா உதவும் என்று சீனா கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் வெளியுறவு ஆணைக்குழு அலுவலகத்தின் பணிப்பாளர் வாங் யீ (Wang Yi) உறுதியளித்துள்ளார்.
தென்மேற்கு சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள குன்மிங்கில் நடைபெறும் ஏழாவது சீன-தெற்காசிய எக்ஸ்போ கண்காட்சியில், இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்தபோது, வாங் இந்த உறுதியை அளித்துள்ளார் என கூறப்படுகின்றது.
சீனா எப்போதும் இலங்கையின் நம்பகமான மூலோபாய பங்காளியாக உள்ளது. அத்துடன், இலங்கையும் எப்போதும் சீனாவுடன் நட்பாகவே இருந்து வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீனா உறுதியாக உள்ளது
அத்துடன், இலங்கையின் இறையாண்மை சுதந்திரம் மற்றும் தேசிய கண்ணியத்தைப் பாதுகாப்பதில் சீனா உறுதியாக உள்ளது என்றும் சீனா கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் வெளியுறவு ஆணைக்குழுவின் அலுவலகத்தின் பணிப்பாளர் வாங் யீ தெரிவித்துள்ளார்.