தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், நடிகருமான விஷால், கடந்த நடிகர் சங்கத் தேர்தலில் நடிகர் சரத்குமாருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து முன்னிறுத்தி வந்தார்.
இதனைத்தொடர்ந்து, சரத்குமாரின் மகள் வரலட்சுமியை காதலிப்பதாகவும், அவரைத்தான் திருமணம் செய்யப்போவதாகவும் விஷால் தெரிவித்திருந்த நிலையில், தன்னுடைய நிலையிலிருந்து வரலட்சுமி விலகினார்.
தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை திரையுலகில் தொடர்ந்து சந்தித்து வந்தார் விஷால். இதுதொடர்பாக சில வழக்குகளில் வெற்றிகண்ட நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத்தேர்தலிலும் தற்போது குதித்துள்ளார்.
இந்நிலையில், தற்போது சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடிகை ஆண்ட்ரியாவுடன் விஷால் ரகசிய திருமணம் செய்துள்ளதாக இணையத்தில் படத்துடன் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து விசாரித்தபோது, மிஷ்கின் இயக்கும் துப்பறிவாளன் படத்தின் சூட்டிங் சிதம்பரம் அருகே நடைபெற்ற நிலையில், சிவராத்திரியையொட்டி இருவரும் சிதம்பரம் நடராசர் கோவிலுக்கு சென்றுள்ளனர். அங்கு வழக்கமாக விருந்தினர்களுக்கு மாலை அணிவிக்கப்படுமாம்.
அதுபோல் இருவருக்கும் அணிவிக்கப்பட்டிருக்கிறது. பின்னர் இருவரும் கோவிலை சுற்றி வந்துள்ளனர். இதனை பார்த்த பக்தர்கள் சிலர் இருவரும் திருமணம் செய்ததாக நினைத்து புகைப்படம் எடுத்து இணைய தளத்தில் உலாவவிட்டிருக்கின்றனர்.