Loading...
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தப்பணிகளுக்கான பரீட்சகர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் செயற்பாடுகள் இணையவழி முறைமை ஊடாக மாத்திரம் முன்னெடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி வரை கோரப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Loading...
அதன்படி, பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசித்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ கைபேசி செயலியான ‘DoE’ மூலமும் இணையவழி விண்ணப்பங்களை சமர்பிக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...