நம்மை விட்டு மறைந்த ஜெயலலிதா அவர்கள் அவரது தோழி சசிகலாவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினாராம். இந்த கடிதத்தை தயாரித்தவர் யாரென்ற விபரம் தெரியவில்லை.
ஆனால், தற்போதைய வைரல் செய்தியாக இந்த கடிதம் உள்ளது. அதுதான் தற்போது சமூகவளைதளத்தில் பரவி வரும் பரபரப்பு செய்தியாகியுள்ளது.
அன்பு உடன் பிறவா தோழி சசி, உன் அன்பு அம்மு (ஜெயா) விண்ணுலகிலிருந்து எழுதும் மடல்.
நீ நலமா என்ற வரியை நான் எப்படி கேட்பேன்? ஏனென்றால் விண்ணுலக ஜன்னல் வழியாக நான் தினமும் பார்க்கிறேனே! அதன் பின்பும் நீ நலமா என்று நான் எப்படி கேட்பேன்?
காட்சிகள் அரங்கேரும் வேகமும், நேர்த்தியும் என் முதுகிற்கு பின் நடந்த பல நாள் திட்டத்தின் பரமபத விளையாட்டா? அன்பு தோழியே?
உனக்காக என் இரத்த உறவுகளை தள்ளி வைத்தேனே……என் கடைசி நிமிடத்தில் ஒரு பிடி மூச்சுக் காற்றுக்காக என் இதயம் ஏங்கியபோதுதான் உறவுகளின் அருமை நான் உணர்ந்தேன்.
நீ என்னை அக்கா என்றழைத்தாலும் நான் உனக்கு அன்னையாகத்தானே இருந்தேன்.
மக்களால் நான் மக்களுக்காக நான் என்று கர்ஜித்துக் கொண்டிருந்த என்னை…. அமைதியாக்கி என் உழைப்புகளையே உனதாக்கி கொண்டாய். விண்ணுலகில் புரட்சித் தலைவர் என்னை பார்த்து கேட்கிறார்! கண்ணுக்கு எட்டியவரை எதிரிகளே இல்லை என்ற நீ!…நித்தம் நித்தம் துரோகிகளுடனே வாழ்ந்திருக்கிறாயே என்று.
நான் என்ன பதில் சொல்ல முடியும்?. என் துரோக வரலாறு…..அடுத்த தலைமுறைக்கு நல்ல பாடமாக இருக்குமென்ற ஆறுதல் ஒன்று மட்டும் எனக்கு மிச்சமிருக்கிறது.
பாமரனுக்கும் பதவி கொடுத்து அழகு பார்த்தேனே “” இன்று ஒருவனும் எனக்காக கலங்காததை நினனைக்கும் போது! உன் அம்முவிற்க்கு நெஞ்சு வலிக்கிறது தோழி.
உடைந்த மீன் தொட்டியிலிருந்து தரையில் விழுந்த மீன்களாய்……..தத்தளித்து கொண்டிருக்கும் என் அப்பாவி தொண்டர்களை, நான் எப்படி ஆற்றுவேன், தேற்றுவேன்.
ஒன்றை மட்டும் சொல்கிறேன் இந்த துரோக வரலாறின் கடைசி பக்கத்தில் உனக்கான காட்சிகள் அரங்கேரும் நாள் கூடிய சீக்கிறம் வரும் என்று நினைத்தேன்..
ஆனால், இவ்வளவு சீக்கிரம் வரும் என்று நான் நினைக்கவில்லை. என்கூடவே இருந்து என்னை அழித்தாய் அல்லவா? அதனால் தான் அந்த ஆண்டவன் நான் உயிருடன் இருக்கும் வரை தீர்ப்பு வராத என் வழக்கு தற்போது தீர்ப்பு வந்ததில் நான் அளவில்லாத மகிழ்ச்சியில் உள்ளேன்.
எனக்கிழைத்த துரோகத்தினால் நீ இன்று சிறையில் அவதிப்படுகிறாய். கவலைப்படாதே இதெல்லாம் நீ செய்த பாவங்களுக்கான தண்டனை தான்.
என்ன இருந்தாலும், என் தோழி என்பதால் நீ கஷ்டப் படுவது எனக்கு வேதனை தான் அளிக்கிறது. இனிமேலாவது நல்லது செய்து புண்ணியம் சேர்த்துக் கொள்.
இப்படிக்கு
உன் உடன்பிறவா தோழி
அம்மு..(ஜெயா)