வீதி அபிவிருத்தி அதிகார சபை தனியார் மயமாக்கப்படமாட்டாது எனவும் அதன் ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்படமாட்டாது எனவும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன வலியுறுத்தியுள்ளார்.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று (18.08.2023) இடம்பெற்ற வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தொழிற்சங்க கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
“அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் வர்த்தமானி மூலம் நிதி அமைச்சின் கீழ் உள்ள சஹஸ்யா என்ற நிறுவனத்திடம் அதிவேக நெடுஞ்சாலை கையளிக்கப்பட்டுள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகார சபை
இந்த விடயம் இருப்புநிலைக் கணக்கில் சொத்துக்களை அதிகரிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும் வீதி அபிவிருத்தி அதிகார சபையானது ஒருபோதும் தனியாரிடம் ஒப்படைக்கப்படவில்லை.” என தெரிவித்துள்ளார்.