பேலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெட்டியாகொட பிரதேசத்தில் இயங்கி வந்த இரசாயன பொதி செய்யும் தொழிற்சாலையின் களஞ்சியசாலை தீப்பிடித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த தீப்பரவல் சம்பவமானது நேற்று (18.08.2023) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்று மாடிகளை கொண்ட தொழிற்சாலையில் முதல் மாடியில் உள்ள அறையொன்றில் இயங்கி வந்த இரசாயன பொதிசெய்யும் களஞ்சியசாலையே இவ்வாறு தீப்பிடித்துள்ளது.
தீ பரவல்
கொழும்பு மாநகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததுடன் இரண்டு மாடிகள் கொண்ட தொழிற்சாலையின் ஏனைய மாடிகளுக்கு தீ பரவாமல் தீயணைப்பு படையினர் தடுத்து நிறுத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இரசாயன பொதி செய்யும் தொழிலை நடத்தி வந்த நபரும் அவரது மகனும் இரசாயன பொதி செய்து கொண்டிருந்த போதே தீ பரவியதாகவும், தீ விபத்தில் இருவரும் காயமடைந்து கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேலியகொட பொலிஸார் மேலதிக மேற்கொண்டு வருகின்றனர்.