நிலவும் வரட்சியான நிலையை கருத்திற் கொண்டு 69,220 வாடிக்கையாளர்களுக்கு நேர அடிப்படையின் கீழ் நீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அவ்வகையில், கொழும்பு மற்றும் புறநகர் உட்பட பல பகுதிகளில் இன்று (19) காலை 08.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (20) அதிகாலை 02.00 மணி வரை 18 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய பராமரிப்பு பணிகள்
இதன்படி, கொழும்பு, தெஹிவளை-கல்கிசை, கடுவெல மற்றும் கோட்டை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளுக்கும், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ, கொட்டிகாவத்தை, முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளுக்கும், இரத்மலானை மற்றும் கட்டுபெத்த பிரதேசங்களுக்கும் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை விளக்கமளித்துள்ளது.