சந்திர கிரகத்துக்கு திங்கள் கிழமைகளில் வெள்ளை அலரி மலர் கொண்டு பூஜை செய்ய வேண்டும். புதன் கிரகத்துக்கு புதன் கிழமைகளில் துளசி கொண்டு பூஜிக்கலாம்.
ராகு கால பூஜைக்கான மலர்கள்
ராகு கால நேரம் என்பது வாரத்தில் அனைத்து நாட்களிலும் உண்டு. இதில் செவ்வாய் கிழமை மற்றும் வியாழக் கிழமைகளில் செய்யப்படும் ராகு கால பூஜை மிகவும் சிறப்பானது. இதைத்தவிர மற்ற நாட்களிலும் ராகு கால பூஜை செய்யலாம். ஒவ்வொரு கிழமைகளில் ஒவ்வொரு விதமான மலர்களைக் கொண்டு பூஜை செய்வதால் வாழ்வில் நிம்மதியும் வளங்களும் பெருகும். சூரிய கிரகத்துக்கு ஞாயிற்று கிழமைகளில் பாரிஜாதம் மற்றும் வில்வ மலர்களைக் கொண்டு பூஜை செய்ய வேண்டும். சந்திர கிரகத்துக்கு திங்கள் கிழமைகளில் வெள்ளை அலரி மலர் கொண்டு பூஜை செய்ய வேண்டும்.
செவ்வாய் கிரகத்துக்கு செவ்வாய் கிழமைகளில் செவ்வரளி, செந்தாமரை மற்றும் செம்பருதி மலர் கொண்டு ராகு கால பூஜை செய்வது செவ்வாய் தோஷம் விலகும். புதன் கிரகத்துக்கு புதன் கிழமைகளில் துளசி கொண்டு பூஜிக்கலாம். வியாழக்கிழமைகளில் குரு கிரகத்துக்கு மஞ்சள் நிற மலர்கள் மற்றும் சாமந்தி மலர் கொண்டு பூஜை செய்யவேண்டும். சுக்கிரனுக்கு வெள்ளிக் கிழமைகளில் வெள்ளை அரளி கொண்டு பூஜை செய்யலாம். சனி பகவானுக்கு சனிக் கிழமைகளில் நீல நிற சங்கு மலர் கொண்டு அர்ச்சிக்க வேண்டும். மேற் கண்ட ஒவ்வொரு தினத்திலும் குறிப்பிட்ட மலர்களைக் கொண்டு பூஜை செய்தால் இல்லத்தில் அமைதி மற்றும் சுபிட்சம் பெருகும்.