Loading...
முலாம் பழத்தில் 95% நீர்ச்சத்துக்கள், விட்டமின்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் போன்ற ஆரோக்கியமான சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது.
Loading...
இந்த பழத்தில் உள்ள சத்துக்கள் அனைத்தும் நமது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, உடலுக்கு தேவையான குளிர்ச்சியைத் தருவதில் சிறந்த பழமாக உள்ளது.
முலாம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
- முலாம் பழத்தில் சர்க்கரை மற்றும் கலோரியின் அளவு மிகக் குறைவாக உள்ளது. எனவே உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால், உடல் எடையைக் குறைந்து, அழகான உடலமைப்பை பெறலாம்.
- முலாம் பழத்தில் கரோட்டினாய்டு அதிகமாக உள்ளதால். இது நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைக் குறைத்து, நமது உடலில் புற்றுநோயை உண்டாக்கும் செல்களை வேருடன் அழிக்க உதவுகிறது.
- முலாம் பழத்தில் உள்ள அடினோசைன், நமது உடம்பின் ரத்த செல்கள் கட்டிப்படுவதைத் தடுத்து, மாரடைப்பு மற்றும் இதயம் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கிறது.
- முலாம் பழத்தில் உள்ள நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளதால், இது செரிமானப் பிரச்சனைக்கு இடையூறு விளைவிக்கும் அமிலத் தன்மையை அகற்றி, செரிமான பிரச்சனை இல்லாமல் தடுக்கிறது.
- முலாம் பழத்தில் உள்ள கொலாஜென் என்ற புரதக் கலவை, சருமம் போன்ற திசுக்களின் செல்களைப் பாதுகாக்கிறது. மேலும் இது உடலில் ஏற்படும் காயங்களை குணப்படுத்தி, சருமத்தின் உறுதித் தன்மையை பாதுகாக்கிறது.
- சிறுநீர் பிரிப்புத் தன்மை முலாம் பழத்தில் உள்ளது. எனவே இதை சாப்பிடுவதால், சிறுநீரக நோய் மற்றும் அதில் ஏற்படும் புண்கள் குணமாகும். எலுமிச்சை பழத்துடன் முலாம் பழத்தை சேர்த்து சாப்பிட்டால், கீல் வாதம் குணமாகும்.
- விட்டமின் A சத்துக்கள் முலாம் பழத்தில் அதிகமாக உள்ளதால், இது கண் பார்வை குறைபாடு பிரச்சனைகள் ஏற்படுவதை தடுத்து, கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
- முலாம் பழத்தில் பொட்டாசியம் சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. எனவே இதை தினமும் ஜூஸ் செய்து குடித்தால், இதயத் துடிப்பை சீராக்கி, நமது மூளைக்குத் தேவையான ஆக்ஸிஜனை அனுப்பி, மூளைச் சோர்வு பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
- நீரிழிவு நோய் உள்ளவர்கள் எப்போதும் குறைந்த சர்க்கரை மற்றும் கலோரி உள்ள உணவுகளை உண்பதால், அதிகப்படியான சோர்வை உணரக் கூடும். இதற்கு அவர்கள் முலாம் பழ ஜூஸ் சாப்பிட்டால் முழுமையான உடல் எனர்ஜி கிடைக்கும்.
Loading...