Loading...
நிட்டம்புவ-தெபஹெர பிரதேசத்தில் இரண்டு மாடி கட்டடத்தில் இருந்து வீழ்ந்து ஒருவர் நேற்று (19.08.2023) உயிரிழந்துள்ளார்.
மத்திஹக்கவத்த, தெபஹெர பகுதியை சேர்ந்த 69 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
Loading...
புற்றுநோயால் பாதிப்பு
சுமார் இரண்டு வருடங்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர், சம்பவத்தன்று, அளவுக்கு அதிகமாக மது அருந்திய நிலையில் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
சடலம் வத்துபிட்டிவல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், நிட்டம்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...