அமெரிக்காவின் கன்சாஸ் நகரின் ஒரு மதுபான விடுதியில், கடந்த சில நாட்களுக்கு முன் சீனிவாஸ் என்ற இந்தியர் சுட்டுக்கொல்லப்பட்டார். அந்த மதுபான விடுதியில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆதம் புரின்டன் என்பவர், ‘என் நாட்டை விட்டு வெளியேறுங்கடா’ என்ற கோஷத்துடன் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். அதே இடத்தில் சீனிவாஸ் இறந்தார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஹிலாரி கிளின்டன், சீனிவாஸ் மரணம் குறித்து கூறுகையில், இந்தியரான சீனிவாஸ் கொலைக்கு கண்டிப்பாக ட்ரம்ப் பதில்சொல்லியே ஆகணும் என்று தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் சுட்டுக்கொல்லப்பட்ட சீனிவாசன் உடல் இன்று விமானம் மூலம் இந்தியாவுக்கு எடுத்துவரப்படுவது குறிப்பிடத்தக்கது.