இத்தாலியின் கௌரவத்தை காப்பாற்ற அந்நாட்டு அதிபர் செய்த செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தென்கிழக்கு ஐரோப்பாவின் பால்கன் தீபகற்பத்தில் உள்ள நாடு அல்பேனியா. இந்த நாட்டிற்கு சென்ற இத்தாலிய சுற்றுலா பயணிகள் நால்வர் அங்குள்ள உணவகத்தில் சாப்பிட்ட நிலையில் பணம் செலுத்தாமல் வெளியேறி உள்ளனர்.
கோடைகால சுற்றுலாவிற்கு சென்ற அதிபர்
இது சம்பந்தமான ஒரு கண்காணிப்பு கமராவின் காணொளி காட்சி சமூக வலைதளங்களில் பரவியது. இந்நிலையில் இத்தாலியின் அதிபர் ஜியோர்ஜியா மெலனி (Giorgia Meloni), அல்பனி நாட்டதிபர் எடி ரமா (Edi Rama) அழைப்பை ஏற்று தனது குடும்பத்துடன் அங்கு கோடைகால சுற்றுலாவிற்கு சென்றிருந்தார்.
நாட்டின் நற்பெயருக்கு களங்கம் வரக்கூடாதென்பதால்
அப்போது அவருக்கு, நாட்டின் 4 சுற்றுலா பயணிகளின் நடத்தை குறித்த செய்தி எட்டியது. நாட்டின் நற்பெயருக்கு களங்கம் வரக்கூடாதென்பதால் அவர்கள் செலுத்த வேண்டிய கட்டணத்தை அவர்களுக்காக தானே கட்ட முடிவெடுத்தார்.
“அந்த முட்டாள்கள் செலுத்த வேண்டிய கட்டணத்தை கட்டி விடுங்கள்” என அல்பேனிய நாட்டிற்கான இத்தாலிய தூதுவரிடம் மெலனி தெரிவித்ததாக, அல்பனி அதிபர் எடி ரமா தெரிவித்தார்.