Loading...
2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று (திங்கட்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியை பாகிஸ்தான் உத்தியோகபூர்வமாக நடத்தினாலும், இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல விரும்பாததால், அவர்கள் பங்கேற்கும் போட்டிகள் இலங்கையில் நடைபெறவுள்ளது.
Loading...
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மேலும் குல்தீப் யாதவ், மொஹமட் சிராஜ், மொஹமட் ஷமி, இஷான் கிஷ்ன், ஷ்ரதுல் தாக்கூர், அக்ஷர் பட்டேல், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, பிரதீஷ் கிருஷ்ணா, மேலதிக வீரராக சஞ்சு சம்சனும் உள்ளனர்.
Loading...