Loading...
யாழின் வர்த்தகர் ஒருவரின் மகன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
32 வயது மதிக்கதக்க இளைஞனே கொட்டடியில் உள்ள அவரது வீட்டில் இன்று (21.08.2023) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த இளைஞன் ஐஸ் போதைப் பொருளை அதிகளவில் பாவித்த நிலையில் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Loading...
இந்நிலையில் மீட்கப்பட்ட சடலம் யாழ்.போதான வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் நாளைய தினமே சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது. அதன் பின்னரே உயிரிழப்புக்கான உறுதியான காரணம் வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Loading...