மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில் பயணித்த இரு வாகனங்கள் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று திங்கள் (21) மாலை மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில் பருத்திப்பண்ணையில் இடம்பெற்றுள்ளது.
தலைமன்னார் ஊர்மனையைச் சேர்ந்த இரண்டு மாதக்குழந்தையின் தந்தையான லோறன்ஸ் மனோகரன் நிசாந்தன் (வயது- 32) என்பவரே விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
சம்பவத்தில் உயிரிழந்த நபர் தனது மோட்டார் சைக்கிளில் தலைமன்னார் ஊர் மனைக்கு பயணித்துக்கொண்டிருந்த போது வெளி மாவட்டத்திலிருந்து சுற்றுலா வந்த ஹயஸ் ரக வாகனம் தலைமன்னார் ஊர்மனையிலிருந்து மன்னாருக்கு வந்த போது இரண்டு வாகனங்களும் மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் மன்னார் பொது வைத்தியசாலைக்கு உடற்கூற்று பரிசோதனைக்காக எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக தலைமன்னார் பொலிஸார் மேலதிக விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.