ஜெயலலிதா மறைந்த பிறகு, தமிழகத்தில் பெரும் புரட்சிகள் வெடித்து வருகின்றன. தொடர் புரட்சிகளால் மக்கள் நாளை என்ன போராட்டம் நடைபெறுமோ என்று அலசி கொண்டிருக்கின்றனர்.ஜல்ல்லிகட்டு போராட்டம் உலகை திரும்பிப் பார்க்க வைத்தது.
அதே போல ஆரம்பித்து விட்டது நெடுவாசல் போர். இம்முறை எந்த மாதிரி தடைகள் வந்தாலும் உடைத்தெறிந்து வெற்றி பெறுவோம் என்கிறகர்கள் மாணவர்கள்.
: உணவை மாணவ மாணவிகளே சமைத்துக் கொள்ள ஏற்பாடு..!
: இம்முறை எந்த நடிகனுக்கும் உள்ளே அனுமதி இல்லை…!
: கிராமத்தின் எல்லையில் உணவு தயாரிக்க மக்கள் ஏற்பாடு..!
: பேராவூரணியில் இருந்து அரிசி மூட்டைகள் வருகிறது..!
:பொன்னாங்காணி கிராமத்து மாணவிகள் சமையல் பொறுப்பை ஏற்கிறார்கள்..!
:அடிடா வா இம்முறை அடித்துப் பார் …போலீசுக்கு பகிரங்க சவால் விடும் மாணவர் அமைப்பு
:போலீஸுக்கும் தெரியும் இம்முறை மாணவர்கள் அமைதி காக்க மாட்டார்கள் என்று..!! சிங்கக் குட்டிகளை அடித்துப் பார்..! எதற்கும் தயார்.
இதுதான் நெடுவாசல் கோஷம்.
சென்னையில் ஆதரவு தமிழர்களின் வீரவிளையாட்டன ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மதுரை மக்களுக்கு ஆதரவளித்து சென்னை மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கைகோர்த்தனர்.அதே போல நெடுவாசல் போருக்கும் கூடுகிறார்கள்.
இதன் எதிரொலியாக தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் இளைஞர் படை அணி திரண்டன.
வெளிநாடுவாழ் இந்தியர்கள் இந்தப் போராட்டத்துக்கு அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும் ஆதரவு தெரிவித்து ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டனர்.
மதுரையிலும் வாடிவாசல் திறக்குவரை வீடுவாசல் செல்லமாட்டோம் என்று பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், மாணவர்கள் என்று திரண்டனர்.
இம்முறை மீத்தேனுக்கு மூடு விழா நடத்திய பின்தான் கலைவோம் என்கிறார்கள்.அசத்துங்க சிங்கக் குட்டிகளே..!