முட்டை இறக்குமதியை நிறுத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முட்டை உற்பத்தியாளர்கள் உள்ளூர் முட்டைகளை 60-65 ரூபாய்க்கு விற்பனை செய்யும் நிலையில்,இறக்குமதியையடுத்து,முட்டையின் விலையை 40-45 ரூபாவாக குறைக்க நேரிட்டுள்ளதாகவும் முட்டை உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
முட்டையின் தன்னிறைவு
இதற்கமைய, நாளொன்றுக்கு 10 இலட்சம் முட்டைகள் வீதம் இந்தியாவில் இருந்து 750 இலட்சம் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், இலங்கை சதோசஸ் மற்றும் நாடு முழுவதும் உள்ள பல்பொருள் அங்காடிகள் ஊடாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் டிசெம்பர் மாதத்திற்குள் நாடு உள்ளூர் முட்டையில் தன்னிறைவு அடையும் எனவும், அதன் பின்னர் உள்ளுர் முட்டை ஒன்றின் விலை 30-35 ரூபாவிற்கும் குறைவாகவே இருக்கும் எனவும் அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்தார்.