ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் இடையே முதலாவது ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்று முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 201 ரன்கள் எடுத்துள்ளது.
ஆசிய கோப்பை தொடருக்கு முன்பாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. இந்த தொடர் இரண்டு அணிகளுக்கும் பொதுவான ஆடுகளமாக இலங்கையில் வைத்து நடைபெறுகிறது.
இவ்விரு அணிகளுக்கு இடையேயான இந்த ஒருநாள் தொடர் நேற்று தொடங்கி, 26-ம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில், நேற்று முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படிமுதலில் ஆடிய பாகிஸ்தான் 201 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இமாம் ஹல் ஹக் 61 ரன்கள் எடுத்தார்.
ஷதாப் கான் 39 ரன்னும் எடுத்தார். இதையடுத்து, 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது. தொடக்கம் முதல் பாகிஸ்தான் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. இதனால் விக்கெட்டுகள் விரைவில் வீழ்ந்தன.
இறுதியில், ஆப்கானிஸ்தான் 59 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் சார்பில் ஹரிஸ் ராப் 5 விக்கெட் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது வென்றார். இதன்மூலம் ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் 1-0 என முன்னிலை வகிக்கிறது.