Loading...
கிழக்கு மாகாணத்தில் கடந்த 15 நாட்களில் மாத்திரம் 5 பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகரை, ஏறாவூர், மற்றும் கந்தளாய் பொலிஸ் நிலையங்களில் பணியாற்றிவரும் அதிகாரிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும், அவர்கள் மீது ‘சக பொலிஸ் அதிகாரியைத் தாக்கியமை, இளைஞர் ஒருவரை அச்சுறுத்தி பணம் பறித்தமை, திருட்டில் ஈடுபட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
இந்நிலையில் அவர்கள் ஐவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் வெளியே வந்துள்ள நிலையில் அவர்கள் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...