Loading...
லிந்துலையில் இளம் பெண்ணொருவர் குளத்தில் விழுந்து தனது உயிரை மாய்த்துள்ள நிலையில் இன்று காலை அவரது உடலைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
தலவாக்கலை, லோகி தோட்டத்தைச் சேர்ந்த மகாமணி தயானி என்ற 26 வயதான இளம் தாயொருவரே இவ்வாறு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
Loading...
இதே வேளை அவரது ஒரு வயதுக் குழந்தை மாயமாகியுள்ள நிலையில் அக்குழந்தையுடன் அவர் குளத்தில் குதித்தாரா? என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் குறித்த பெண் 5 பக்கக் கடிதமொன்றை எழுதி வைத்துள்ளார் எனவும், அதில் தன்னையும், தனது குழந்தையையும் கணவரும், அவரின் குடும்பத்தாரும் துன்புறுத்திவந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.
Loading...