நூறு கோடி பணம் கொடுத்து போயஸ் வீட்டை மீட்கச் சொன்ன நடராஜன்
அதிமுக துணை பொதுச்செயலாளர் பதவியை தினகரனுக்கு கொடுத்ததும் தீபக்கை உறுத்தவே, உடனே ஊடகங்களில் தன்னுடைய மாறுதலான வெளிப்பாட்டை பேசத்தொடங்கினார். இது தான் வெளியே தெரிந்த உண்மை.
ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது என்று விசாரிக்க ஆரம்பித்தார்கள். அரசியல் நோக்கர்கள். சில திடுக்கிடும் ரகசியங்கள் வெளியானது.
அதுமட்டுமின்றி, உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி, 1௦௦ கோடி ரூபாய் அபராத தொகையை, தானே (தீபக்) தனி ஆளாக கட்ட உள்ளதாகவும் அதன் பின், போயஸ் கார்டன் தனக்கும் தீபாவுக்கும் தான் சொந்தம் என குறிபிட்டிருந்தார்.
உண்மை அதுவல்ல..நடராஜன் தான் தீபக் மற்றும் தீபாவிற்கு பணம் கொடுக்கிறார். அவர்கள் நீதிமன்ற அபராதத்தைக் கட்டி போயஸ் கார்டனை மீட்கிறார்கள்.
அதன் பின் தீபா போராடி வாங்கியதாக மக்களை முட்டாளாக்கிவிட்டு அங்கு குடி போவார்கள். அதன் பின் சசிக்கு எதிராக வாய் திறக்க மாட்டார்கள்.
அடப்பாவிங்களா..!