பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இன்று (24) புகையிரதங்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று (23) பிற்பகல், புகையிரத கட்டுப்பாட்டாளரை தாக்கிய சம்பவம் தொடர்பில் புகையிரத மின்சார ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மின்சார ஊழியர்கள் குழுவொன்று அவசர வேலை நிறுத்தத்தை மேற்கொண்டது.
இதன் காரணமாக நேற்றிரவு அனைத்து புகையிரத பாதைகளிலும் புகையிரத தாமதம் ஏற்பட்டதோடு, அங்கு பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
ஒழுக்காற்று நடவடிக்கை
இருப்பினும் புகையிரத அதிகாரிகள் தலையிட்டு புகையிரதத்தை வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்ததையடுத்து புகையிரதம் மீண்டும் இயக்கப்பட்டது.
இதேவேளை, இன்றைய தினம் சிறந்த முறையில் புகையிரதங்களை இயக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து புகையிரத பொது மேலாளர் டபிள்யூ.ஏ.டி.எஸ். குணசிங்க புகையிரத தாமதங்களைத் தவிர்த்து அனைத்து புகையிரதங்களையும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நிறுவனத்தின் நடைமுறைகளை பின்பற்றாத ஊழியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் புகையிரத திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.