Loading...
நாட்டில் தங்க கடன் அடகு சேவைக்கு இலங்கை மத்திய வங்கி உச்சபட்ச வட்டி வீதத்தை நிர்ணயித்துள்ளது.
நேற்று (23.08.2023) மாலை கூடிய இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
அதன்படி அரச வங்கிகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து தனியார் வங்கிகளும் தங்க கடன் அடகு சேவைக்கு உச்சபட்சமாக 18 வீத வட்டியையே அறவிட முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
Loading...
23 வீத உச்சபட்ச வட்டி
அதேவேளை, கடன் அட்டைக்கு 28 வீதத்தையும், தற்காலிக மேலதிக பற்றுக்கு 23 வீதத்தையும் உச்சபட்ச வட்டியாக அறவிட முடியும் என அறிவித்துள்ளது.
அத்துடன், கொள்கை வட்டி வீதங்களை தற்போதைய மட்டத்திலேயே தொடர்ந்தும் பேணுவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...