பதுளை – நமுனுகுல, பூட்டவத்தை தோட்டத்தில் வருடாந்த திருவிழா உற்சவத்தில் இடம்பெற்ற தேர் ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கியதில் 02 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று(24.08.2023) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து சம்பவம்
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மேலும் மூன்று பேர் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஊர்வலத்தின் போது தேர், உயர் அழுத்த மின்கம்பியில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் ஆரம்பமான ஊர்வலம் இன்று அதிகாலை வரை நீடித்ததாகவும், தேரை கோவிலுக்கு கொண்டு செல்லும் போது, உயர் அழுத்த மின்கம்பியில் தேரின் மேல்பகுதி மோதி மின்சாரம் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், சம்பவத்தில் 30 வயது மற்றும் 42 வயதுடையவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த இருவரே உயிரிழந்தனர்.இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நமுனுகுல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.