இவர் இதுவரை 2 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். அவரது மறைவிற்கு WWE அமைப்பு தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இரங்களை தெரிவித்துள்ளது. WWE மல்யுத்த போட்டிகளில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் ப்ரே வியாட் என்றே சொல்லலாம். அவர் களத்திற்குள் எண்ட்ரி கொடுக்கும் ஸ்டைலை குழந்தைகள் பார்த்தால் பயப்படுவார்கள். அண்டடெக்கர் போல இருட்டில் எண்ட்ரி கொடுப்பார்.
இவர் WWE மல்யுத்த போட்டிகளில் 2009-ம் ஆண்டு அறிமுகமானார். மைக் ரோட்டுண்டா என்ற இயற்பெயரை கொண்ட இவர் 2010 முதல் 2011 வரை ஹஸ்கி ஹாரிஸ் என்ற பெயரில் போட்டிகளில் கலந்து கொண்டார். பின்னர் தனது பெயரை ப்ரே வியாட் என மாற்றி கொண்டார். இவர் இதுவரை 2 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு போட்டிகளில் கலந்து கொள்ளாமல் இருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை அவர் உயிரிழந்ததாக பிரபல முன்னாள் WWE வீரர் டிரிபிள் ஹெச் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
புகழ்பெற்ற WWE வீரர் ப்ரே வியாட்டின் தந்தையிடம் இருந்து தற்போது ஒரு அழைப்பு வந்தது. எங்கள் WWE உறுப்பினர் ப்ரே வியாட் நெஞ்சுவலியால் இன்று அதிகாலை உயிரிழந்தார் என்ற சோக செய்தியை எங்களுக்கு அவர் தெரிவித்தார். அவரது குடும்பத்திற்காக நாங்கள் பிராத்தனை செய்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். அவரது மறைவிற்கு WWE அமைப்பு தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இரங்களை தெரிவித்துள்ளது.