சட்டவிரோதமான முறையில் தங்க கடத்தலில் ஈடுபட்டு சுங்க பிரிவினால் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அறநெறிகள் மற்றும் சிறப்புரிமைகள் குழுவில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் கடந்த மே மாதம் 23ம் திகதி முற்பகல் டுபாயிலிருந்து நாடு திரும்பிய போது, தங்க பிஸ்கட்கள் மற்றும் கையடக்க தொலைபேசிகளுடன் சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் 3.5 கிலோகிராம் தங்கம் மற்றும் 91 கையடக்க தொலைபேசிகள் அரசுடைமையாக்கப்பட்டு 75 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தார்.
குறித்த தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளின் மொத்த பெறுமதி எட்டரைக் கோடி ரூபாவுக்கும் அதிகமென மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறலின் கீழ் இது குறித்து அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த நாடாளுமன்றில் இவ்வாறு கருத்துத் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.