Loading...
முட்டை இறக்குமதியின் மூலம் சந்தையில் ஏற்பட்டிருந்த முட்டை தட்டுப்பாட்டை தவிர்க்க முடிந்ததாக இலங்கை அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.
முட்டை இறக்குமதி
அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை கொள்கையின் அடிப்படையில், அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபன் ஊடாக, முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.
Loading...
அடுத்த 03 மாதங்களுக்கு தேவையான அனுமதி ஏற்கனவே கிடைத்துள்ளதாகவும் முட்டை இறக்குமதி தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Loading...