யாழ்ப்பாணத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று(26.08.2023) உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தவசிகுளம் – மிருசுவில் பகுதியைச் சேர்ந்த இமானுவேல் ஜேசுரட்ணம் (வயது 79) என்ற 4 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த முதியவர் நேற்று முன்தினம் (25.08.2023) காலை தேவாலயத்திற்கு சென்றுகொண்டிருந்த போது பனை மரத்திலிருந்து கீழே விழுந்த குளவி கூட்டில் இருந்த குளவிகள் அவரை கொட்டியுள்ளது.
மேலதிக சிகிச்சை
இந்நிலையில் அவர் மிருசுவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதன்பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.