இலங்கையில் அண்மைக்காலமாக துப்பாக்கிசூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மன்னாரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இரண்டு விவசாயிகள் உயிரிழந்திருந்தனர்.
இந்த நிலையில் மற்றுமொரு துப்பாக்கி சூட்டு சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.இதன்படி மின்னேரிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட ரொட்டவெவ, கல்லோயா பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட தகராறு காரணமாக
தனிப்பட்ட தகராறு காரணமாக மாமானார் மருமகனை சுட்டுக் கொன்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நபர் மின்னேரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்திருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ரொட்டவெவ, கல்ஓயா பிரதேசத்தில் வசிக்கும் 27 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்தவராவார்.
மேலதிக விசாரணை
துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் இன்று (27) ஹிங்குராக்கொட நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மின்னேரிய காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.