இந்த தொண்மை தெய்வத்துக்கும் இதே போன்றே இன்றும் செய்வது மரபு. ஆண்கள் வலது பக்கமும் , பெண்கள் இடது பக்கமும் உடைத்து திருஷ்டியை கழித்து செல்வது வழக்கம்.
திருஷ்டி கழித்தல்
கந்தாயங்கள் மொத்தம் நான்கு. இதையே ஒரு எலுமிச்சை பழமாக கருதி நான்கு பிளப்பாக செய்து அதில் கற்பூரம் ஏற்றி, ஆன்ம பிணிகள் பீடிக்கும் மெய், வாய், கண், மூக்கு, செவி அடங்கிய தலையை சுற்றி கைகால் முதல் தலையில் இருந்து பாதம் வரை ஏற்றி இறக்கி, ஆண்கள் வலது பக்கமும் , பெண்கள் இடது பக்கமும் உடைத்து அவர்களுக்கு ஏற்பட்டுள்ள திருஷ்டியை கழித்து செல்வது வாடிக்கை வழக்கம். இதுதொன்று தொட்டு வந்துள்ள பழமை பிரார்த்தனையாகும்.
அங்காளம்மன் என்ற இந்த தொண்மை தெய்வத்துக்கும் இதே போன்றே இன்றும் செய்வது மரபு. ஆதியில் அமாவாசை கருவா என்றும், பவுர்ணமியை விளக்கண்ணி என்றும் பழமை திருவிழாவாக கொண்டாடி உள்ளனர்.
அவ்வாறே பழமை திருவிழாவாக அங்காளம்மன் ஊஞ்சல் திருவிழா ஒவ்வொரு மாதமும் அமாவாசை தோறும் கொண்டாடுகின்றனர். அமாவாசை தோறும் இந்த திருக்கோயிலுக்கு வந்தால், அவர்களை பிடித்துள்ள பிணிகள், பீடைகள், சகடைகள், தோசங்கள், பில்லி வைப்பு, சூன்யம் போன்ற ஆன்ம நோய்கள் குணமாவதால் அமாவாசை தோறும் அன்பர்கள் இந்த திருக்கோயிலுக்கு வருகின்றனர் என்பது உண்மை.