Loading...
உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று (திங்கட்கிழமை) நிறைவடைந்துள்ளதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அதன் தீர்மானம் சபாநாயகர் மஹிந்த யப்பா அபேவர்தனவிற்கு அனுப்பி வைக்கப்படும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Loading...
அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Loading...