நீர்ப்பாசன அமைச்சில் இருந்த 300 ற்கும் மேற்பட்ட வாகனங்கள் குறித்த தகவல்கள் இல்லை என தெரியவந்துள்ளது.
கடந்த 24ஆம் திகதி தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட கணக்காய்வு அறிக்கையின்படி நீர்ப்பாசன அமைச்சின் 344 வாகனங்கள் அமைச்சின் கட்டுப்பாட்டில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சின் கட்டுப்பாட்டில் இல்லை
நீர்ப்பாசன அமைச்சின் பெயரில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் தொடர்பில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் படி 650 வாகனங்கள் நீர்ப்பாசன அமைச்சின் நீர்ப்பாசன செயலாளர் அல்லது அமைச்சின் முகவரியின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆனால் நீர்ப்பாசன அமைச்சின் வாகனப் பதிவேட்டின்படி அமைச்சினால் பயன்படுத்தப்படும் வாகனங்களின் எண்ணிக்கை 306 ஆகும். அதன்படி 344 வாகனங்கள் அமைச்சின் கட்டுப்பாட்டில் இல்லை என நேற்று முன்தினம் (26ஆம் திகதி) கணக்காய்வு மூலம் தெரியவந்துள்ளது.