ஊழல் குற்றச்சாட்டின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி இம்ரான் கானின், உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக அவரது புஷ்ரா பீபி கவலை தெரிவித்துள்ளார்.
அத்துடன் பயங்கரவாதிகள் அடைக்கப்படும் அட்டாக் சிறையிலிருந்து, அடிலியா சிறைச்சாலைக்கு அவரை மாற்றுமாறும் புஷ்ரா பீபி பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதேவேளை இம்ரான் கானின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்துவருவதாகவும், உணவில் விஷம் வைத்து அவர் கொல்லப்படலாம் என்றும் அவரது கட்சியினர் அச்சம் தெரிவித்துவந்தனர்.
இந்நிலையில், இம்ரான் கானை சந்தித்த பஞ்சாப் மாகாண சிறைத்துறை ஐ.ஜி. ஃபரூக் நஸீர், அவருக்கு மெத்தை, தலையணை, ஏர் கூலர், ஃபேன், பிளாஸ்க் போன்றவற்றுடன் புதிய புதிய கழிவறை ஒன்றும் கட்டித்தரப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அத்துடன் 24 மணி நேரமும் இம்ரான் கான் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளதாகவும், அவருக்கென பிரத்யேகமாக தயாரிக்கப்படும் உணவும் பரிசோதனைக்கு உட்படுத்தியதற்கு பிறகே வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.