தன்னை நாடி வரும் சிவனடியார்களுக்கு நல்ல உணவு கொடுத்து உபசரித்து வந்தார். நாயனாரின் சிவதொண்டில் அவருடைய மனைவியும் அவருக்கு உதவி செய்து வந்தார். இறைவனாகிய சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டு சிவதொண்டுக்கே தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர்கள் தான் நாயன்மார்கள்.
இளையான்தன் குடிமாறன் அடியானுக்கும் அடியேன் என்று திருத்தொண்டர் தொகையில் சுந்தரமூர்த்தி சுவாமிகளால் புகழ்ந்து சொல்லப்படுகிற இளையான்குடி நாயனாரின் வரலாற்றை பற்றி இன்று நாம் தெரிந்துகொள்ளலாம்.
பாண்டியநாட்டில் உள்ளது தான் இளையான்குடி. இந்த ஊரில் மாறனார் என்ற சிவனடியார் இளையான்குடியில் பிறந்ததால் இளையான்குடிமாற நாயனார் என்று சொல்லி அழைக்கப்பட்டார். மிகுந்த செல்வச்செழிப்பில் இருந்த இளையான்குடிமாற நாயனார் தன்னை நாடி வரும் சிவனடியார்களுக்கு நல்ல உணவு கொடுத்து உபசரித்து வந்தார்.
இப்படி கொடுத்து கொடுத்தே வறுமையில் வாடினார். இளையான்குடிமாற நாயனாரின் சிவதொண்டில் அவருடைய மனைவியும் அவருக்கு உதவி செய்து வந்தார். சிவபெருமான் ஒருநாள் இவர்களை சோதிப்பதற்காக சிவனடியார் போன்று வேடமிட்டு நடுநிசி நேரத்தில் இளையான்குடிமாற நாயனாரும் அவருடைய மனைவியும் உண்ண உணவின்றி பட்டினியாக இருக்கக்கூடிய நேரத்தில் சிவாயநம என்று கூறிக்கொண்டு சிவபெருமான் இளையான்குடிமாற நாயனாரின் வீட்டுக்கதவை தட்டினார்.
அப்போது மழை கொட்டோகொட்டென்று கொட்டியபடி இருந்தது. இளையான்குடிமாற நாயனார் சிவாயநம என்று சிவனுடைய நாமத்தை கேட்டதும், வந்திருப்பது சிவனடியார் தான் என்று நினைத்து சிவனடியாருக்கு உணவு கொடுக்கனுமே என்று கூறிக்கொண்டு ஓடிவந்து கதவை திறந்தார்.
வந்திருக்கும் சிவபெருமான் இளையான்குடிமாற நாயனாரை பார்த்து அப்பனே எனக்கு நன்கு பசிக்கிறது என்று சொன்னார். உடனே இளையான்குடிமாற நாயனார் மழையில் நனந்து வந்த சிவனடியாரின் திருமேனியை ஒரு துணியால் துடைத்து வீட்டினுள் உட்கார வைத்தார். பின்னர் தன் மனைவியை பார்த்து சிவனடியார் மிகுந்த பசியுடன் வந்திருக்கிறார். ஆனால் இவருக்கு உணவு கொடுக்க நம்முடைய வீட்டில் யாதொரு பொருளும் இல்லையே என்று கூறினார். உடனே அவருடைய மனைவி இப்போது நடுநிசி நேரம் ஆகிவிட்டது. நமக்கு கடனும் யாரும் கொடுக்க மாட்டார்கள். எனவே நாம் சிவனடியாருக்கு உணவு கொடுக்காமல் இருப்பதை விட இறப்பதே நல்லது என்று கூறினார்.
உடனே நாயனாரின் மனைவி, இன்றைக்கு பகலில் விதைத்து வந்தீர்களே விதைநெல் அதை வாரிக்கொண்டு வந்தால் நான் அதை உணவாக சமைத்துவிடுவேன் என்று கூறினார். மனைவி கூறியபடியே இளையான்குடிமாற நாயனார் நடுநிசி நேரத்தில் முளைநெல்லை கொண்டுவருகிறேன் என்று கூறிவிட்டு மழையில் நனைந்தவாறே ஐந்தெழுத்து மந்திரிரமான சிவாயநம என்று கூறிக்கொண்டு வயலுக்குள் சென்றார். மழையில் முளையில் வயலில் ஒரு ஓரமாக ஒதுங்கி கிடந்தது.
அதை வாரி எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தார். உடனே நாயனாரின் கையில் இருந்த நெல்லை மனைவி வாங்கிக்கொண்டு நீரில் போட்டார். உடனே மனைவி இளையான்குடிமாற நாயனாரிடம் இதை சமைப்பதற்கு விறகு இல்லையே என்று கூறினார். உடனே இளையான்குடிமாற நாயனார் என்ன செய்தார் என்றால் ஒரு கோடாறியை எடுத்து தன்னுடைய வீட்டின் கூரையில் ஒரு பகுதியை இடித்து அந்த கட்டிகளை எடுத்து அடுப்பு எரிக்க பயன்படுத்திக்கொள்ளுமாறு கூறினார்.
உடனே இளையான்குடிமாற நாயனாரின் மனைவி முளைநெல்லை வறுத்து, குத்தி, புடைத்து அரிசியாக்கி சோறும் சமைத்தார். அதன்பிறகு தோட்டத்தில் உள்ள கீரையை எடுத்து கறியும் சமைத்தார். சமையல் முடிந்ததும் நாயனாரும் சிவனடியாரிடம் சென்று அய்யனே… சாப்பிட வாருங்கள் என்று அழைத்தார். உடனே சிவனடியார் உருவத்தில் வந்த சிவபெருமான் இருவருக்கும் காட்சி கொடுத்தார்.
இளையான்குடிமாற நாயனாரும் அவருடைய மனைவியும் எல்ல்லையில்லாத மகிழ்ச்சியில் திழைத்தனர். உடனே சிவபெருமான் இளையான்குடிமாற நாயனாரை பார்த்து அன்பனே… சிவனடியார்களுக்கு உணவு கொடுத்த நீங்கள் சிவகணங்களுடன் திகழ வாருங்கள் என்று கூறி மறைந்தார். அதன்பிறகு நாளடைவில் இவர்கள் இருவரும் சிவலோகம் சென்றனர்.