ஐபோன் 15 சீரிஸ் பற்றிய விவரங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. இது ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கலாம். ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 15 சீரிஸ் மாடல்களின் வெளியீட்டு தேதியை உறுதிப்படுத்தி இருக்கிறது. அதன்படி செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறும் நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்ய முடிவெடுத்துள்ளது. இந்த நிகழ்வு ஆப்பிள் அதிகாரப்பூர்வ சேனல்களில் நேரலை செய்யப்படுகிறது.
இந்திய நேரப்படி செப்டம்பர் 12-ம் தேதி இரவு 10.30 மணிக்கு ஐபோன் 15 சீரிஸ் அறிமுக நிகழ்வு துவங்க இருக்கிறது. ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 15 சீரிஸ் மாடல்களை இந்த நிகழ்வில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதுதவிர பல்வேறு இதர சாதாகனங்கள் மற்றும் ஆப்பிள் சேவைகள் பற்றிய அறிவிப்புகள் இந்த நிகழ்வில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.
ஐபோன் 15 சீரிசில் ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ, ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் என நான்கு மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என்று தெரிகிறது. புதிய ஐபோன் 15 சீரிஸ் பற்றிய விவரங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.
அந்த வகையில், புதிய ஐபோன் 15 சீரிஸ் மாடல்களில் லைட்னிங் போர்ட்-க்கு மாற்றாக யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்படும் என்று தெரிகிறது. ஐபோன்கள் மட்டுமின்றி ஆப்பிள் நிறுவனம் இரண்டு புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல்களையும் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
இவை ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 என்ற பெயர்களில் அறிமுகம் செய்யப்படலாம். இது ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும் என்று தெரிகிறது. புதிய இரண்டாம் தலைமுறை ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மாடல் 3டி ப்ரின்டிங் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச்-இன் தோற்றம் கிட்டத்தட்ட அதன் முந்தைய வெர்ஷனை போன்றே காட்சியளிக்கும் என்று தெரிகிறது.