பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் இரு இந்து தொழிலதிபர்கள், கொள்ளையர்களால் கடத்தப்பட்டு, சிறையில் வைத்து சித்திரவதை செய்யப்படும் இரண்டு காணொளிகள் தொழிலதிபர்களின் குடும்பத்தினருக்கு கிடைத்தது.
ஒரு காணொளியில், 25 வயதான சாகர் குமார், தான் அடிக்கடி அவர்களால் தாக்கப்படுவதைத் தாங்க முடியாமலும், உடல்நிலை சீரற்று இருப்பதால், தன்னை அடிக்க வேண்டாம் என்று கடத்தல்காரர்களிடம் கெஞ்சும் நிலமை பதிவாகியுள்ளது.
இரண்டாவது காணொளியில், 65 வயதான ஜெகதீஷ் குமார், பலுசிஸ்தானில் பிணைக் கைதியாக வைக்கப்பட்டுள்ளார். அவர் தன்னை கடத்திச் சென்றவர்களிடம் தன்னை அடிக்க வேண்டாம் என தெரிவிப்பது பதிவாகியுள்ளது.
பெரிய தொகை
ஜகதீஷ் குமார் கடந்த 65 நாள்களாக கொள்ளையர்களின் பிடியில் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த இரண்டு கடத்தல் சம்பவத்திலும், கொள்ளையர்கள் தொழிலதிபர்களை விடுவிக்க கிட்டத்தட்ட 40 கோடி பிணைத் தொகை கோருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு பெரிய தொகையை செலுத்தும் நிலையில் நாங்கள் இல்லை எனவும் மேலும், கடத்தல்காரர்களுடன் தொடர்பு இல்லாததால், இருவரையும் விடுவிப்பதற்கான பிணைத் தொகை குறித்து பேச்சுவார்த்தை நடத்த முடியவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் பாகிஸ்தானில் பெரும்பாலும் தொழிலதிபர்களை கடத்தி, நீண்ட காலம் வைத்து இருந்து, பெரும் தொகையை தொகை பெறுவதை வழக்கமாக கொள்ளையர்கள் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.